நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேர் மாயம்! ஜக்கி வாசுதேவ் கண்ணீர்!தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை வேண்டும்! முதல்வர் விஜய்க்கு பெ. சண்முகம் கடிதம்!தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேர் பற்றி எதுவும் தெரியவில்லை!

சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.

Area affected by floods in Nepal.

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. - படம் - பிடிஐ

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:01 pm IST

நேபாளத்தில் நேரிட்ட பெரு வெள்ள பேரிடர் சம்பவத்துக்குப் பின், சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

49 தமிழர்கள் குறித்து தற்போது வரை தகவல் இல்லை என்றும், தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்த பயணத்தில் இருந்த நிலையில், அவர்களும் காணாமல் போயிருக்கிறார்கள். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத் தாங்கல் பகுதியிலிருந்து விக்ரமன், மஞ்சுளா, குரோம்பேட்டையிலிருந்து 6 பேர், காஞ்சிபுரத்திலிருந்து 6 பேர் என 49 பேர் நேபாளம் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருக்கிறார்கள்.

மேலும் நாமக்கல்லிலிருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேரும் நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவர்கள் சென்னையிலிருந்து நேபாளம் சென்று, அங்கு பெரு வெள்ளச் சம்பவத்தில் காணாமல் போயிருப்பது அவர்களது உறவினர்களுக்கு பெரும் துயரத்தை அளித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஆன்மிக சுற்றுலா ஏஜென்ஸி மூலம் ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 49 பேர் நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

27ஆம் தேதி அவர்கள் நாடு திரும்பவிருந்த நிலையில், புதன்கிழமை நேபாளத்தில், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியுரிமை அலுவலகம் சென்றதாக அவர்களிடமிருந்து கடைசியாக தகவல் வந்துள்ளது.

ஆனால், அதன்பிறகு அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை என மகாதேவ் கைலாஷ் ஏஜென்ஸி தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த ஏஜென்ஸி அலுவலகத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேபாளம் சென்றவர்கள் விவரங்கள், அவர்களை கடைசியாக தொடர்பு கொண்டது எப்போது? என்பது விவரங்களை திரட்டி வருகிறார்கள்.

Story image
Story image

கடந்த 14ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட அவர்கள், 27ஆம் தேதி திரும்பவிருந்த நிலையில், நேற்று பெரு வெள்ளம் நேரிட்டிருக்கிறது. 49 பேர் சென்ற பயணக் குழுவினருடன் ஏஜென்ஸி நிறுவனத்தின் உரிமையாளரின் மகனும் சென்றதாகக் கூறப்படுகிறது.

Summary

No information available on the 49 people who traveled from Chennai to Nepal! New update!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.