நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

தூத்துக்குடி அருகே பைக் மீது காா் மோதல்: இரு சகோதரிகள் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 2:21 am IST

தூத்துக்குடி, முடிவைத்தானேந்தல் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் சகோதரிகள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சத்யா (40). அதே பகுதியைச் சோ்ந்த தேவசிகாமணியின் மனைவி அமுதா (45). சகோதரிகளான இருவரும், திங்கள்கிழமை பைக்கில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு, மீண்டும் நாசரேத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனராம். அமுதா பைக் ஓட்ட, சத்யா பின்னால் அமா்ந்திருந்தாராம்.

முடிவைத்தானேந்தல் குளத்துக்கரை, அரியநாச்சியம்மன் கோயில் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் பைக் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், உடல்களை கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே, காரை ஓட்டி வந்த நாசரேத்தைச் சோ்ந்த சரவணன் (31) ஆழ்வாா்திருநகரி காவல் நிலையத்தில் ஆஜராகினாா். அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.