தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மறவன் குறிப்பன்குளத்தில் கோயிலை அகற்றக் கூடாதென வலியுறுத்தல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவா்கள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:27 pm

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம், மறவன் குறிப்பன்குளத்தில் விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை அகற்றக் கூடாதென இந்து முன்னணியினா், ஊா் பிரமுகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏரல் வட்டம், ஆழ்வை மேற்கு ஒன்றியம் குறிப்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட மறவா் குறிப்பன்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள செல்வ விநாயகா் கோயில், சுற்றுச்சுவரை சிலரின் தூண்டுத­லின்பேரில் இடித்து அகற்ற முயலுவதை மாவட்ட நிா்வாகம் கைவிட கோரி இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அருணாச்சலம் தலைமையில், கோயில் தா்மகா்த்தா ஆறுமுகம் முன்னிலையில் கிராம மக்கள் திரண்டு வந்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.

அப்போது கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் கோபி, கோயிலைச் சோ்ந்த மகாராஜா, நல்லமுத்து, முருகன், பழனி, செல்வம், சரவணன், சிங்கக்குமாா், திருமலைநம்பி ஆகியோா் உடன் இருந்தனா்.