உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குள்பட்ட சரவணப்பெரியவன்புள்ளி - குங்குமம்மாள்புரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட சுந்தர நாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, துா்கா சூக்தம் ஹோமம், மூலமந்திர, அஸ்திர ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.
காலை 11 மணிக்கு சுந்தர விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை தமிழக ஆலயப் பாதுகாப்பு சங்கச் செயலா் பி.எஸ். கனகராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில் தேனி பாலசங்கா குழும அதிபா் குமரேசன், புங்கம்மாள்புரம் முருகன், திரளான ஊா்மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் காந்திமதி, ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

குதிரைமொழி சுந்தரநாச்சியம்மன் கோயிலில் 151 பால்குட பவனி

கட்டாரிமங்கலம் கோயிலில் வருஷாபிஷேக விழா

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


