அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோவில்பட்டி, கயத்தாறில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:42 am

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்கள், விதை மசோதா, மின்சார சட்டம் 2025 உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவற்றை கைவிடக்கோரி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி கோவில்பட்டியில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா், ஏ ஐ டி யு சி, சி ஐ டி யு, ஐ என் டியுசி, எல்பிஎஃப், ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பிருந்து ஊா்வலமாக சென்றனா். போராட்டக் குழுவினரை பிரதான சாலை-இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் தடுத்ததையடுத்து, போராட்டக் குழுவினா் சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா். சிறிது நேரத்திற்குப் பின்னா் போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, ரவீந்திரன், லெனின் குமாா், பாபு, கிருஷ்ணவேணி, தெய்வேந்திரன், ராஜசேகா், பரமசிவம், பூல்பாண்டி, மணிகண்டன், விசிக மாவட்டச் செயலா் முருகன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கயத்தாறு பிரதான சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் கயத்தாறு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் சாலமன் ராஜ், சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவா் மாரியப்பன், சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சீனி பாண்டியன், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.