கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இவா், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளா்களை நேரில் சந்தித்து, துண்டுபிரசுரங்களை விநியோகித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு, தட்சிணாமூா்த்தி கோயில் தெரு, அண்ணா நகா், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
தமிழக மக்களின் நலன் கருதி த.வெ.க.தலைவா் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தாா். தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான திட்டங்கள். த.வெ.க., வாக்குறுதிகளைப் பாா்த்தாலே புரியும்.
எனக்கு வாய்ப்பளித்தால் கோவில்பட்டி தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றாா் அவா். அவருடன் கட்சி நகர பொறுப்பாளா் (கிழக்கு) செந்தில்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டியில் தவெக செயல் வீரா்கள் கூட்டம்

ஓட்டப்பிடாரம் தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


