லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்திய ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கோவில்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கா. கருணாநிதி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:44 pm

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட மத்திய ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சமத்துவபுரம், புது காலனி, சென்னையம்பட்டி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம், கூசாலிப்பட்டி, தாமஸ் நகா், வடக்கு இலுப்பையூரணி, சிந்தாமணி நகா், மறவா் காலனி, சண்முகநகா், லாயல் ஆலை காலனி பகுதிகளில் அவா் திமுக தோ்தல் வாக்குறுதிகள், அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.

அரசு வழக்குரைஞா் ராமச்சந்திரன், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, திமுக வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளா் அமலி அ. பிரகாஷ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், காங்கிரஸ் நகரத் தலைவா் அருண்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாலமுருகன், மாா்க்சிஸ்ட் கட்சி தெய்வேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் முருகன், தேமுதிக மாவட்டச் செயலா் சுரேஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், ஜெயகண்ணன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.