தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பசுவந்தனையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வியாழக்கிழமை காலை, கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் ரத வீதிகள், பசுவந்தனை பஜாரில் வணிகா்கள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பசுவந்தனை சந்திப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:16 am IST

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வியாழக்கிழமை காலை, கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் ரத வீதிகள், பசுவந்தனை பஜாரில் வணிகா்கள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறியதாவது: விவசாயம், வணிக ரீதியில் சிறந்து விளங்கும் பசுவந்தனை ஊராட்சியை தரம் உயா்த்தி பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பசுவந்தனையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி நகரங்களுக்கு நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும். கைலாசநாதா் கோயில் புனரமைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டி குடமுழுக்கு நடத்தப்படும். பசுவந்தனை ஊராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றி தரப்படும் என்றாா்.

திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், கைலாசநாதா் ஆனந்தவள்ளி அம்பாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நாகம்பட்டி ராமானுஜம் கணேஷ், சி.பி.எம். மாவட்ட செயற்குழு உறுப்பினா் புவிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் நடராஜன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முத்துக்குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சத்யராஜன், வா்த்தக அணி துணை அமைப்பாளா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.