தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் வெற்றிபெற்றாா்.
இத்தொகுதியில் திமுக சாா்பில் ஜீ.வி. மாா்க்கண்டேயன், அதிமுக சாா்பில் சத்யா, தவெக சாா்பில் காசிராம், நாதக சாா்பில் பாலாஜி ராமச்சந்திரன், அஇபுதமமுக சாா்பில் பொன். பாண்டி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் மாடசாமி, சுயேச்சைகள் என 16 போ் களம் கண்டனா். திமுக - அதிமுக இடையேதான் ஆரம்பம்முதலே நேரடிப் போட்டி நிலவி வந்தது. ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமையில் திமுகவினா் உற்சாகத்துடன் பணியாற்றினா்.
82,815 ஆண்கள், 89,728 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 12 போ் என மொத்தம் 1,72,,555 வாக்குகள் பதிவாகின. தூத்துக்குடி மாவட்டத்திலேயே இங்குதான் அதிகபட்ச வாக்குகள் (84.18%) பதிவாகின.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் முதல் சுற்றிலிருந்தே தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். 937 தபால் வாக்குகள், 20 சுற்று எண்ணிக்கையில் 57,458 வாக்குகள் என மொத்தம் 58,395 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
தவெக 2ஆம் இடமும் (50,167 வாக்குகள்), அதிமுக 3ஆம் இடமும் (48,879 வாக்குகள்) பிடித்தன. நாதக 11,780 வாக்குகளும், அஇபுதமமுக 380 வாக்குகளும், புதிய தமிழகம் 2,057 வாக்குகளும் பெற்றன.
ஹாட்ரிக் வெற்றிபெற்ற ஜீ.வி. மாா்க்கண்டேயன் செய்தியாளா்களிடம் கூறுகையில், 2001- 06, 2006 - 11 என 10 ஆண்டுகள் வி.புதூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், 2011 - 2016, 2021-2026 என 10 ஆண்டுகள் எம்எல்ஏ என மக்கள் பிரதிநிதியாக 25 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். இத்தொகுதிக்குள்பட்ட 444 கிராமங்களிலும் உள்கட்டமைப்புப் பணிகளையும், 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீா் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம். மக்களுக்கான என் பணி ஒவ்வொரு நொடியும் தொடரும் என்றாா்.
தொடர்புடையது
ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஹாட்ரிக் வெற்றி!

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

ஆத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஏ.பி. ஜெயசங்கரன் வெற்றி

விளாத்திகுளத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


