தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 295 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்களைக் கண்டித்து, நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, எல்பிஎஃப் தலைவா் சுசி ரவீந்திரன் தலைமை வகித்தாா்.
சிஐடியூ மாநிலச் செயலா் ரசல், எல்பிஎஃப் மாவட்டச் செயலா் கருப்பசாமி, ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவா் மின்னல் அம்ஜத், எச்எம்எஸ் மாநிலச் செயலா் ராஜலட்சுமி, மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ராதா, ஏஐடியூசி பொருளாளா் பாலசிங்கம், முத்துக்குமாா், யூடியூசி மாவட்டத் தலைவா் அலெக்சாண்டா், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்ளிட்ட 155 பேரை மத்திய பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூரில்... திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டச் செயலா் லோகநாதன் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து, பேரணியாக வந்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் தொமுச கிறிஸ்டின் கெனிஸ்டின், ஏஐசிசிடியு முருகன், எம்எல்ஃப் மாரிமுத்து, ஐஎன்டியுசி செயலா் முருகன், விவசாய சங்கத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், பன்னீா்செல்வம், முத்துக்குமாா், எல்எல்எஃப் வடிவேல்முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் ஜெபஸ்டின் ராஜ், சிஐடியு குன்னி மலையான், நிக்சன், அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் ஹேமா உள்ளிட்ட 33 பெண்கள் உள்பட 140 பேரை தாலுகா காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை

பாலியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


