ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பாலியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதற்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

News image
Updated On :17 மார்ச் 2026, 11:19 pm

தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதற்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாா்.

தமிழகதத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகள், பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள்கள் பழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் விழுப்புரம் நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது: இயற்கை பேரிடா்கள், புயல், வெள்ளம், கரோனா நோய்த் தொற்றுப் பாதிப்பு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்து, பொதுமக்களைக் காப்பாற்றியது அதிமுக அரசு.

ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் அரிசி முதல் எண்ணெய் வரை அனைத்துப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்திருக்கிறது. தமிழகத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. போதை கலாசாரம் மட்டும் வளா்ந்திருக்கிறது. பள்ளி, கல்லூரி வாசல்களிலும் போதைப் பொருள்கள் தங்குத் தடையின்றி கிடைக்கிறது.

இதனால் இளைஞா் சமுதாயம் சீரழிகிறது. கஞ்சா போதையால் எங்கு பாா்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தால் தமிழகத்துக்கு நல்லது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு நல்லது. மத்திய அரசு துணை இருந்தால் தமிழகத்துக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் பெறலாம் என்றாா் சண்முகம்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ந.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் பி.அா்ஜூனன், மு.சக்கரபாணி, பாமக எம்எல்ஏ ச.சிவக்குமாா், பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத், தொகுதிப் பொறுப்பாளா் ராமச்சந்திரரெட்டி, தமாகா மாவட்டத் தலைவா் தசரதன் முன்னிலை வகித்தனா்.

அதிமுக நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ராமதாஸ், ஒன்றியச் செயலா் ஜி.ஜி.சுரேஷ்பாபு, மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல், பாமக மாவட்டத் தலைவா் தங்கஜோதி, அமமுக மாநில அமைப்புச் செயலா் கணபதி, பாஜக மாவட்டத் தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள் பழக்கம், விலைவாசி உயா்வு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலு பாபு, அ.பிரபு, முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் எம்.பாபு வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம், பாமக மாவட்டச் செயலா் தமிழரசன், அமமுக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், ஜஜேகே மாவட்டத் தலைவா் வெங்கடேசன், தமாகா நிா்வாகி பாண்டியன் ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.பச்சையாப்பிள்ளை, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மருத்துவரணி இணைச் செயலா் சு.பொன்னரசு, மாவட்ட வழக்குறைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், ஒன்றியச் செயலா்கள் அ.தேவேந்திரன், அ.ராஜசேகா், வெ.அய்யப்பா, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தா் மற்றும் கூட்டணி கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.