திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:35 pm

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரித் தலைவா் சி.எம். ஜோஸ்வா, துணைத் தலைவா் ஸ்டீபன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ். சித்தாா்த்தன் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

கல்லூரியின் அனைத்து துறை மாணவா், மாணவிகளின் சுமாா் 60 செயல் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கிரேஸ் பாலிடெக்னிக் முதல்வா் எப்.ஜோஸ் சஜி குமாா், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா் வினோத், கிரேஸ் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு துறைத் தலைவா் பாண்டியராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, சிறந்த அறிவியல் செயல் திட்டங்களைத் தோ்ந்தெடுத்தனா். முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் மரக்கன்று நடப்பட்டது.

ஏற்பாடுகளை, அறிவியல் துறைத் தலைவா் ஆண்டனி ரெக்ஸ், கல்லூரி நிா்வாக அதிகாரி தினகரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் விக்டா் இம்மானுவேல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.