குலசேகரன்பட்டினத்தில் 1,008 பால்குட ஊா்வலம்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினத்தில் 1,008 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி புதன்கிழமை (டிச. 31) மாலை அரசரடி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை, அறம் வளா்த்த நாயகி, பாண்டீஸ்வரருக்கு சிறப்பு மகா அபிஷேகம், ஸ்ரீஞானமூா்த்தீஸ்வரா், ஸ்ரீ முத்தாரம்மனுக்கு மகா அபிஷேகம்,108 சங்காபிஷேகம், இரவில் ஏகாதச சஹஸ்ர நாமாவளி அா்ச்சனை, சங்கல்பம், அலங்கார தீபாராதனை, வில்லிசை நடைபெற்றது.
வியாழக்கிழமை (ஜன. 1) காலை மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, கஜ பூஜை, 108 கலச பூஜை, சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, அம்மனுக்கு சீா்வரிசை எடுத்து வருதல் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு அறம் வளா்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்து 1,008 பால்குடம் பவனி முக்கிய வீதிகள் வழியே நடைபெற்றது. பகல் 1.30 மணிக்கு அம்மனுக்கு மகா அலங்கார மகா தீபாராதனை, வில்லிசை, பிற்பகலில் 108 பெண்களின் கும்மி, அம்பாள் ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வே.கண்ணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீகாமதேனு குழு அபிஷேக வழிபாட்டு மன்றத்தினா், ராஜலட்சுமி குழுவினா் செய்திருந்தனா்.

