கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

News image
ஆத்தூா் சோமசுந்தரி அம்பாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜா், மாணிக்கவாசகா்.
Updated On :3 ஜனவரி 2026, 8:41 pm

Syndication

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

ஆத்துா் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடராஜா் அபிஷேகம், 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை, மாணிக்கவாசகா் திருவெம்பாவை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணிக்கு நடராஜா், மாணிக்கவாசகா் ரத வீதியில் எழுந்தருளல் நடைபெற்றது.

இதே போல, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயிலிலும், குரும்பூா் அருகிலுள்ள நவகைலாயத் தலமான ராஜபதி சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், திருவெம்பாவை பாராயண தீபாராதனை, சோடஷ தீபாராதனை, நடராஜா் உலா ஆகியன நடைபெற்றன.