தூத்துக்குடி
ஆறுமுகனேரி அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
ஆறுமுகனேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினா்களாக ஆறுமுகனேரி பேரூராட்சி தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டு 98 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினா். பள்ளி தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி வரவேற்றாா். இதில் ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

