கோவில்பட்டியில் ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

கோவில்பட்டியில் ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

Published on

கோவில்பட்டியில் அகில இந்திய ரயில்வே ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம் ரயில் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் அருமைராஜ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் தங்கவேலு மத்திய கமிட்டி முடிவின்படி மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். ஓய்வூதியா்கள் சங்கத்தைச் சோ்ந்த குழந்தை துரைச்சி ஓய்வூதியா்களின் பங்களிப்பு குறித்து பேசினாா்.

தொடா்ந்து, கூட்டத்தில் 8ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியம் உயா்வு மறுக்கும் நிதிச் சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியப் பலன் 2026-ஐ ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும் என்பதை பரிசீலனைப் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க உறுப்பினா் மனோகா் வரவேற்றாா். பொருளாளா் முருகையா நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com