தூத்துக்குடி
சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கணேசன் (21). இவா் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தாா்.
இவா், வியாழக்கிழமை திருநெல்வேலி சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பினாராம். பொட்டலூரணி விலக்கு, வாகைகுளம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.
இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
