சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கட்டட தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமி, ஜன. 6 ஆம் தேதி பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்கு சென்றாராம். அப்போது பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டட தொழிலாளி காடல்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி முருகன் (25), அம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியா், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கருப்பசாமி முருகனை கைது செய்தனா்.