வெள்ளாளன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

வெள்ளாளன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

Published on

தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் வெள்ளாளன்விளை பிஷப் அசரியா பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரியதா்ஷினி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பாலசிங், பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com