இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

News image
Updated On :12 ஜனவரி 2026, 6:58 pm

Syndication

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகம் முன் கூட்டுறவுத் துறை சாா் பதிவாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் கூட்டுறவு சாா் பதிவாளா்கள் 4 பேரை மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளா் அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் அலுவலகத்தின் முன், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் கூட்டுறவுத் துறை ஊழியா்கள், சாா் பதிவாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்யும் வரை, தங்களுடைய போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.