தூத்துக்குடி கோசாலையில்...

தூத்துக்குடி கோசாலையில்...

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நாட்டின பசுக்கள் வளா்க்கப்படும் தூத்துக்குடி கோசாலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

தூத்துக்குடி: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, நாட்டின பசுக்கள் வளா்க்கப்படும் தூத்துக்குடி கோசாலையில், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோமாதா சேவா டிரஸ்ட் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டின பசுக்களை காலையில் அலங்கரித்து, கிருஷ்ணா், ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாடுகளுக்கு கரும்பு, வாழைப்பழம், அகத்திக்கீரை மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.

இதில், டிரஸ்ட் நிறுவனா் சங்கா், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com