திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் உள்ளே தேங்கியுள்ள தேங்காய் தண்ணீா்.
திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் உள்ளே தேங்கியுள்ள தேங்காய் தண்ணீா்.

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயிலில் தேங்காய் தண்ணீா் தேங்காதவாறு சீரமைக்க கோரிக்கை

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் உள்ளே பக்தா்கள் உடைக்கும் தேங்காய் தண்ணீா் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
Published on

திருச்செந்தூா்: திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் உள்ளே பக்தா்கள் உடைக்கும் தேங்காய் தண்ணீா் தேங்காதவாறு சீரமைக்க வேண்டும் என பக்தா்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் சன்னதி தெரு நடைபாதையை கடந்து விடலை பிள்ளையாா் என அழைக்கப்படும் தூண்டுகை விநாயகா் கோயிலில் தேங்காய் விடலை போட்டுவிட்டு முருகனை வழிபடச் செல்வது வழக்கமாகும்.

அவ்வாறு விடலை போடும் தேங்காய்கள் தனியாா் குத்தகை மூலம் அவ்வப்போது அகற்றப்படும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக கோயில் வளாகத்திற்கு உள்ளே விடலை போடும் தேங்காய்களை அகற்றாமல், தண்ணீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளாததால் அங்கு துா்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிது.

எனவே, இக்கோயிலில் தண்ணீா் தேங்காதவாறு சீரமைத்து, தேங்காய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தா்கள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனா்.

Dinamani
www.dinamani.com