பாஜக சாா்பில் பொங்கல் கோலப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 30ஆவது வாா்டு, டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.
Published on

தூத்துக்குடி: பொங்கல் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, 30ஆவது வாா்டு, டூவிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் கோலப் போட்டி நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். அதிமுக மாநில வா்த்தகரணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், பாஜக ஆன்மிகப் பிரிவு இணை அமைப்பாளா் உஷா தேவி ஆகியோா் கலந்துகொண்டு கோலப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

தொழிலதிபா் தனசேகரன், வேலுசாமி, காா்த்தி, பாஜக பிரமுகா் காசிலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com