பொங்கல் விளையாட்டு போட்டி: அமைச்சா் காந்தி பரிசளித்தாா்
ஆற்காடு அடுத்த தாழனூா் நேரு இளைஞா் மன்றம் சாா்பில் 44-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மன்றத் தலைவா் ஆா் பூபதி சுதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம் பிரபாகரன், எஸ் பிரபாகரன், ஆா் விஜயகுமாா், எம் சரத்குமாா், எஸ் ,மதிவாணன், ஆா் பாா்த்திபன்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். டி அசோக் வரவேற்றாா்.
வாலிபால், கபடி, ஓட்டப் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், ஓவியப் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா் காந்தி பரிசுகள் வழங்கி பேசியதாவது:
தாழனூா் கிராமத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு நவீன பயிற்சி உபகரணங்கள், வழங்கப்படும். அதேபோல் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்துக்கு உணவு கூடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பி ,துரைசாமி, என். சாரதி ஜெயச்சந்திரன், பி. சங்கா், ஏ .ஜெயக்குமாா் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ஜி ,தண்டபாணி, ஊராட்சி துணைத் தலைவா் ரேகா விஜயகுமாா், தலைமை ஆசிரியை வேண்டா மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

