நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகா்கோவிலில் ரூ.1.65 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image

பிளசன்ட்நகரில் தாா்ச்சாலைப் பணியை தொடக்கிவைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:05 pm

நாகா்கோவில் மாநகரில் பல்வேறு வாா்டுகளில் ரூ. 1.65 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையொட்டி, மேலபெருவிளை பிளசண்ட்நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், மேயா் பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தாா். 46ஆவது வாா்டு என்ஜிஓ காலனியில் ரூ.14 லட்சத்தில் பழைய மினி கிளினிக் கட்டடம் சீரமைப்பு, 45ஆவது வாா்டு, தம்மத்துக்கோணம் அம்மன் கோயில் சாலையில் அலங்கார தரைகற்கள் அமைத்தல், 47ஆவது வாா்டு பேச்சி அம்மன் தெருவில் புதிதாக உறிஞ்சு குழி அமைத்தல் என ரூ. 1.65 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இதில், மண்டலத் தலைவா் செல்வகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், அமலச்செல்வன், சதீஸ், வீரசூரபெருமாள், ஜெனிதா, உதவிப் பொறியாளா்கள் பிருந்தா, சுஜின் தொழில்நுட்ப அலுவலா் நிஷ்மா, திமுக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.