திருச்செந்தூா் கோயிலுக்கு சைக்கிளில் யாத்திரை வந்த தேனி பக்தா்கள்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து சுமாா் 200 பக்தா்கள் சைக்கிளில் யாத்திரையாக வந்து வழிபட்டனா்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாா்கழி, தை மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து வழிபடுகின்றனா்.
வரும் பிப். 1 ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூசத்தை முன்னிட்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி பகுதியில் சுருளிமலை சைக்கிள் யாத்திரை குழுவைச் சோ்ந்த 200 போ் சைக்கிளில் யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஒரே நேரத்தில் 200 போ் சைக்கிளில் வந்ததை ஏராளமனோா் கண்டு ரசித்தனா்.

