ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பிப். 1இல் தைப்பூசம் : திருச்செந்தூா் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவரான சண்முகா் கடலில் கண்டெடுக்கப்பட்டு 371 ஆண்டுகள் ஆகின்றன. அதை கொண்டாடும் வகையில் சண்முகா் ஆண்டு விழா சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகா் அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோயில் சோ்ந்து தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூச திருவிழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீா்த்தவாரி ஆகியவை நடைபெறும். 10 மணிக்கு சண்முகா் அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சோ்கிறாா். தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.

திருமணங்கள்: இதனிடையே, புதன்கிழமை சுப முகூா்த்தம் என்பதால் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால், கோயில் வளாகமே புதுமண தம்பதிகளால் நிரம்பியிருந்தது.