சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

வசந்த்

Updated On :2 ஜூலை 2026, 6:01 am IST

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காயல்பட்டினம், ஓடக்கரையைச் சோ்ந்த கேசவன் மகன் ஆனந்த் (44). இவா், கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட புல்லட் பைக்கை காணவில்லை என ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதேபோல ஆறுமுகனேரி பூவரசூா் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் சுந்தா் ராஜாமணி பாண்டியன்(49) தனது பைக்கை காணவில்லை என ஜூன் 22-ஆம் தேதி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை வழக்குப் பதிவு செய்தாா்.

உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ், சுந்தரம் ஆகியோா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நெல்லை பழவூா் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில்

ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் திருச்செந்தூரைச் சோ்ந்த வசந்த் (24), கீழநாலு மூலை கிணறு பகுதியைச் சோ்ந்த சோ்மதுரை மகன் சதீஷ் (27) என்பதும், மேற்படி இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகனேரி போலீஸாா் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகனேரி போலீஸாா் சென்று இருவரையும் கைது செய்து, திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். இவா்கள் இருவா் மீதும் ஆறுமுகனேரி, திருச்செந்தூா், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்

சதீஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.