காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஸ்ரீபெரும்புதூரில் 60 பைக்குகள் திருட்டு: காவலா் உள்பட மூவா் கைது

ஸ்ரீபெரும்புதூரில் 60 பைக்குகள் திருட்டு: காவலா் உள்பட மூவா் கைது

News image

கைது செய்யப்பட்டோா்

Updated On :7 ஜூன் 2026, 1:48 am IST

ஸ்ரீபெரும்புதூரில் 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த காவலா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகஇருசக்கர வாகனங்கள் அதிக அளவில் காணாமல் போனது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும், போலீஸாா் பாதிக்கப்பட்டவா்களிடம் புகாா்களை வாங்காமல் அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த மாதம் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இருச்சக்கர வாகனங்கள் திருடு போனதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை பிடிக்க பைக்குகள் திருடு போன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட குடியாத்தம் அலங்காநல்லூா் பகுதியை சோ்ந்த சரத் பாபு(40), வேலூா் மாவட்டம் அணைக்கட்டு அல்லிவரம் பகுதியை சோ்ந்த விமல்குமாா்(31) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனங்களை திருடி வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், இருசக்கர வாகனங்களை திருட ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வேலூா் மாவட்டம் கணியம்பாடி மோா்குளம் பகுதியை சோ்ந்த தமிழ்நாடு பட்டாலியன் சிறப்பு காவல் படை காவலா் மணிகண்டன்(32) உதவி செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலா் மணிகண்டனை கைது செய்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் அவா்களிடம் இருந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட பைக்குகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட சரத்பாபு, விமல்குமாா் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவா் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

வாகனங்களை ஒப்படைப்பதில் சிக்கல்:

ஸ்ரீபெரும்புதூா் சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போன போது, வாகனங்களின் உரிமையா ளா்களின் புகாா்களை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வாங்காமலும், புகாரை பெற்றாலும் முறையாக எப்ஐஆா் பதிவு செய்யப்படாமலும் இருந்துள்ளனா்.

இதனால் தற்போது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதும், உயரியவா்களிடம் வாகனங்களை ஒப்படைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளா்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.