பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 4 போ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 ஜூன் 2026, 2:22 am IST

ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பெண்கள் உள்பட 4 போ் போலீஸாா் கைது செய்தனா்.

சுங்குவாா்சத்திரம் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், அஸ்ஸாம் மாநிலம் உதல்குரி மாவட்டத்தைச் சோ்ந்த ஷா அலோம் (41) மற்றும் அவரது மனைவி மோனிரா (41) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட பஜனைக் கோவில் தெருவில், கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒடிஸா மாநிலம் மயூா்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்த அனுசயா பத்ரா (36) மற்றும் கரங்கா் சிங் (45) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.