பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

மாதவரத்தில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மாதவரத்தில் இரு சக்கர வாகன திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

மாதவரத்தில் இரு சக்கர வாகன திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (45) என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே தனிப்படை காவல்துறையினா் வாகன சோதனையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வேக வந்த மா்மநபா்களை தடுத்து நிறுத்தி நடத்திய விசாரணையில், செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியை சோ்ந்த விஜய் (22) என தெரிய வந்தது.

தொடா்ந்து, அவனிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் வாகனங்களை திருடுவது வழக்கம் என தெரிய வந்தது. மேலும், இவரிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இவருடன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அஜீத் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதையடுத்து, விஜய்யை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, அவரிடம் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.