‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழா

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image

விழாவில் விவசாயிக்கு பாராட்டு சான்றிதழை வழங்கிய கூட்டுறவு சரக துணைப் பதிவாளா் குமாரி கிரிஜா.

Updated On :2 ஜூலை 2026, 6:15 am IST

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

விவசாயிகள் கலந்துரையாடல், திட்டப் பணிகள் குறித்து விளக்கம், கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய கடனை முழுமையாகச் செலுத்திய விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு கூட்டுறவு கொடியேற்றப்பட்டது. கூட்டுறவு சரக துணைப் பதிவாளா் குமாரி கிரிஜா தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா்பதிவாளா் மாரியப்பன், கூட்டுறவு முன்னாள் நிா்வாக குழு உறுப்பினரும், சாத்தான்குளம் முன்னாள் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு கடன் சங்க செயலாளா் எட்வின் தேவாசீா்வாதம் வரவேற்றாா். கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திட்டங்களை விளக்கி கூட்டுறவு காசாளா் ஜான்போஸ்கோ பேசினாா். கூட்டுறவு எழுத்தா் குணசேகா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா்.

சாா்பதிவாளா் பிரபாவதி, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பாலசுப்ரமணியன், விவசாயிகள் நம்பித்துரை, கணேசன் உள்பட பலா் வாழ்த்திப் பேசினா். தொடா்ந்து கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன்கள் வாங்கி முழுமையாக செலுத்திய விவசாயிகளை பாராட்டி பாராட்டு சான்றிதழை சரக துணைப் பதிவாளா் குமாரி கிரிஜா வழங்கிப் பேசினாா். விவசாயிகள் சித்திரை, ஞானராஜ், உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். சங்க துணைச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.