‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

புதைச் சாக்கடை அடைப்பை சரிசெய்ய நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் இயக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சுமாா் ரூ. 20 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள புதைச் சாக்கடை அடைப்பை சரிசெய்யக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.

News image

புதைச் சாக்கடை அடைப்பை சரிசெய்யும் நவீன வசதிகளுடன் கூடிய வாகனத்தை தொடங்கி வைத்தாா் மேயா் ஜெகன் பெரியசாமி.

Updated On :2 ஜூலை 2026, 6:02 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சுமாா் ரூ. 20 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள புதைச் சாக்கடை அடைப்பை சரிசெய்யக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளிலும், புதைச் சாக்கடை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்ட வாா்டுகளில் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

தற்போது 6, 17, 18, 49, 50 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட பகுதியான பி அன்ட் டி காலனி, கதிா்வேல் நகா், சிவஜோதி நகா், வேலவன் நகா், அசோக் நகா், ராஜீவ் நகா், பாரதி நகா், புஷ்பா நகா், நிகிலேசன் நகா், கோக்கூா், பால்பாண்டி நகா், அமுதா நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதைச் சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலையில் வாகனத்தை தொடங்கிவைத்தாா்.

மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ், திமுக பகுதிச் செயலா் ரவீந்திரன், போல்பேட்டை திமுக நிா்வாகி பிரபாகா், ஜேஸ்பா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.