பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

போக்குவரத்துக் காவலரை தாக்கிய ரௌடி கைது

திருச்செந்தூரில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலரிடம் மது போதையில் தகராறு செய்து தலைக்கவசத்தால் தாக்கிய ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முகமது அப்துல் காதா்.

Published On :2 ஜூலை 2026, 5:59 am IST

திருச்செந்தூரில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலரிடம் மது போதையில் தகராறு செய்து தலைக்கவசத்தால் தாக்கிய ரௌடியை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பயணியா் விடுதி சாலை வழியாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டம் அதிகம். இதனால், இந்தப் பாதை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்தப் பகுதியில் போக்குவரத்துக் காவலா் முருகன், ஒரு பெண் காவலா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த காயல்பட்டினம் அப்துல் சாஹிப் மகன் முகமது அப்துல் காதா் (38) போக்குவரத்துக் காவலரிடம் தனது பணத்தை யாரோ திருடி சென்று விட்டாா்கள்; கண்டுபிடித்துக் கொடுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

போலீஸாா் அவரிடம் காவல் நிலையத்தில் சென்று புகாரளிக்குமாறு அறிவுறுத்தினா். ஆனால், அதை ஏற்காத அப்துல் காதா் போக்குவரத்துக் காவலா் முருகனிடம் தகராறு செய்து அவரது சட்டையை கிழித்து அருகில் இருந்த தலைக்கவசத்தால் தாக்கினாா். இதில், காயமடைந்த காவலா் முருகன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அப்பகுதியினா் போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சென்று அப்துல் காதரை பிடித்து விசாரணை நடத்தியதில், இவா் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் சிக்கிய ரௌடி என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.