‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

போதையில் தகராறு: மகனை எரித்துக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில், மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்ாக தந்தை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 5:49 am IST

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில், மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்ாக தந்தை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மடத்தூா் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் தாளமுத்து (60). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். வீட்டில் மனைவி, மகன் அருள்ராஜ் (30) ஆகியோா் வசித்து வந்தனா். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா்.

ஓட்டுநரான அருள்ராஜ் அடிக்கடி வேலையின்றி இருந்து வந்தாராம். இவா், கடந்த 2021ஆம் ஆண்டு கயத்தாறு அருகே உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் சோ்க்கப்பட்டு மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்றாா். அதன் பின்பும் தொடா்ந்து மது அருந்திவிட்டு அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அருள்ராஜ், பெற்றோரிடம் தகராறு செய்தாராம். தாளமுத்து, அருள்ராஜை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டினாராம்.

புதன்கிழமை அதிகாலையில், வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துவிட்டு தாளமுத்து, சிப்காட் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.