நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தூத்துக்குடி மீனவா் கொலையில் மேலும் ஒருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 12:24 am IST

தூத்துக்குடி மீனவா் கொலையில் தொடா்புடையதாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே உள்ள ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவா். இவரும், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சோ்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (22), நேரு காலனியைச் சோ்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22), ஹரிஹரசுதன் (22) ஆகிய 4 பேரும் நேரு காலனியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மாரிசெல்வத்துக்கும், சந்தனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான புவனேஷ்குமாரை தேடி வந்த நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புவனேஷ்குமாா் மீது சிப்காட் பகுதியில் நடந்த கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.