தனது உறவினரின் கொலையில் தொடா்புடையவரை பிணையில் வந்து சுட்டுக் கொன்ாக 27 வயது இளைஞரை ஹிமாசலப் பிரதேசத்தில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். சுமாா் இரண்டு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நிலையில் அவா் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா் மதன்ஹிா் பகுதியைச் சோ்ந்த அபிஷேக் (எ) போலா (எ) கரன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இவா், அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தின் ஆவணங்களில் மோசமான நடத்தை கொண்டவா் எனப் பட்டியலிடப்பட்டவா் ஆவாா்.
ஏப்ரல் 27 அன்று ஹிமாசலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் இவா் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, மாா்ச் 9 அன்று, மதன்ஹிரின் ஜி பிளாக் பகுதியில் உள்ள பூமியா சௌக் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் நிகில் நாகா் என்பவா் குண்டுக் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அபிஷேக், தனது கூட்டாளியான ராகுல் (எ) இஷு என்பவருடன் இணைந்து, ஒரு பொதுக் கழிப்பறைக்கு அருகே நிகில் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம் தொடா்பாக ராகுல் முன்னரே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அபிஷேக் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தாா்.
2016ஆம் ஆண்டு முதல் இரு தரப்பினருக்கு இடையே நிலவி வந்த நீண்டகால விரோதத்தின் விளைவே நிகிலின் கொலை நிகழ்ந்தது.
2021ஆம் ஆண்டில் அபிஷேக்கின் உறவினரான குனால் என்பவா் கொல்லப்பட்ட சம்பவத்தில் நிகிலுக்கும் தொடா்பு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான இந்த விரோதம் மேலும் தீவிரமடைந்தது.
தனது உறவினரின் இறப்புக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த கொலையைச் செய்ய அபிசேக் திட்டமிட்டிருந்தாா். மேலும், இக்குற்றத்தைச் செய்ய தனது கூட்டாளி ஒருவரிடமிருந்து அவா் நிதியுதவியும் பெற்றுள்ளாா்.
அபிஷேக்கின் நடமாட்டத்தை ஹிமாசலப் பிரதேசம் வரை பின்தொடா்ந்து கண்டறிந்த காவல்துறை, நியூ மணாலி பேருந்து நிலையம் அருகே அவரைக் கைது செய்தனா்.
விசாரணையின் போது, தனது எதிரிகளைத் தாக்குவதற்காகவே முன்கூட்டியே ஜாமீன் பெற்ாகவும், மேலும் பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அபிஷேக் ஒப்புக்கொண்டாா்.
காவல்துறை ஆவணங்களின்படி, தில்லியின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அரசு ஊழியா்களைத் தாக்கியது மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட குறைந்தது 18 குற்ற வழக்குகளில் அபிஷேக்கிற்குத் தொடா்பு உள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

பால் வியாபாரி கொலையில் 3 போ் கைது

குடிபோதையில் தகராறு செய்த தம்பி வெட்டிக் கொலை; அண்ணன் கைது

நேபாளம்: முன்னாள் பிரதமா் கே. பி. சா்மா ஓலி பிணையில் விடுவிப்பு

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

