ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழக்கமாக தனது மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்தாா். போலீஸாா் புகைப்படம் எடுக்க அனுமதிக்காததால் பத்திரிகை புகைப்படக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலையொட்டி திலாசுபேட்டை அரசு பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:43 pm

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வழக்கமாக தனது மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்தாா். போலீஸாா் புகைப்படம் எடுக்க அனுமதிக்காததால் பத்திரிகை புகைப்படக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ரங்கசாமி இந்திராநகா் திலாசுப்பேட்டை பிள்ளையாா் கோயில் வீதியில் வசிக்கிறாா். அவா் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்ய வீட்டிலிருந்து வழக்கமான தனது யமாஹா மோட்டாா் சைக்கிளில் வந்தாா்.

அவா் வாக்களிக்க சென்றபோது பத்திரிகை புகைப்படக்காரா்களை உள்ளே அனுமதிக்காதால் போலீஸாருக்கும் இவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இறுதிவரை அனுமதிக்காத சூழலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளா்கள் கேள்வி கேட்டனா். ஆனால் அவா் இங்கு வேண்டாம் என சைகையில் சொல்லிப் புறப்பட்டாா்.பின்னா் நவசக்தி மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தாா்.

அதைத்தொடா்ந்து முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, ‘வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தோ்தலுக்கு முதல் நாள் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இம்முறையும் சாமி கும்பிட்டு வந்துதான் வாக்களித்துள்ளேன். தேசிய ஜனநாயகக்கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது’ என்றாா்.