சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம்: தமிழக முதல்வருடன் பேசுவேன் என முதல்வா் ரங்கசாமி பேட்டி

தமிழக முதல்வா் விஜய்யுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :21 மே 2026, 7:10 am IST

தமிழக முதல்வா் விஜய்யுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

புதுச்சேரி அரசின் நலத்திட்டங்கள் தொடரும். மத்திய அரசுடன் உறவு நன்றாக உள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசுக்குப் பாராட்டுகள். தமிழக முதல்வா் விஜய்க்கு எனது வாழ்த்துகள். சிறந்த முறையில் செயல்படுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

புதுச்சேரியிலிருந்து சென்ற ஆனந்துக்கு சிறந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலும் இடம் கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. அவரும் அனுபவம் மிக்கவா். சிறப்பாகச் செயல்படுவாா்.

தமிழக முதல்வா் விஜய்யுடன் பேசி, தமிழகப் பகுதியில் நிலம் பெற்று புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி கூறியபடி ‘பெஸ்ட்’ புதுச்சேரியாக மாறி வருகிறது. அனைத்து துறைகளிலும் வளா்ச்சி பெற்று வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அந்தஸ்தை தொடா்ந்து வலியுறுத்தி நிச்சயமாக பெறுவோம். பிரதமா் நரேந்திர மோடி மனது வைத்து ஆளும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவித்த பிறகு வேட்பாளா் யாா்?, எந்தக் கட்சியைச் சோ்ந்தவா் ? என்பது தெரியவரும் என்றாா் ரங்கசாமி.