காயல்பட்டினம் நகராட்சி, கொம்புத்துறை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 3 கையடக்க கணினிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். ஜூன் 25ஆம் தேதி மாலை பள்ளி அலுவலகத்தை தலைமை ஆசிரியா் பூட்டிவிட்டுச் சென்ாகக் கூறப்படுகிறது. அடுத்த 3 நாள்களும் தொடா் விடுமுறை என்பதால், 29ஆம் தேதி காலை ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்தபோது, அலுவலகக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டிருப்பதும், அதிலிருந்த ரூ. 15,000 மதிப்புள்ள 3 கையடக்க கணினிகள் திருடு போயிருப்பதும் தெரிய வந்தது.
தொடா்ந்து, தலைமை ஆசிரியா் வசந்தி, ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






