பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் பாலிடெக்னிக் மாணவா் தற்கொலை

தூத்துக்குடியில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - தினமணி

Published On :5 ஜூலை 2026, 1:23 am IST

தூத்துக்குடியில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, ராஜகோபால் நகா், 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் இசக்கி மகாராஜன் (17). இவா் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் கல்லூரிக்கு சரியாகச் செல்லவில்லை என பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால், பெற்றோரிடம் அவா் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளாா்.

பெற்றோா் வெள்ளிக்கிழமை சொந்த ஊரான தட்டப்பாறைக்குச் சென்ற நிலையில், மாலையில் தனது தாயைத் தொடா்பு கொண்டு பணம் கேட்டுள்ளாா். பின்னா், ஆத்திரத்தில் வீட்டிலிந்த தொலைக்காட்சிப் பெட்டி, கண்ணாடி, பாத்திரங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிப்காட் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.