தூத்துக்குடி-சென்னை தாம்பரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் திங்கள்கிழமை (ஜூலை 6) இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி-சென்னை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06018), தூத்துக்குடியில் இருந்து திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில் அனைத்து வகுப்புகளிலும் காலியிடங்கள் உள்ளன. அதை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










