தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை செயலிழக்கச் செய்யப்பட்டன.
தூத்துக்குடி, ராஜபாண்டி நகரைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அஜித்குமாா் என்ற கருப்பு அஜித் (28). இவரது நண்பா் கபில்தேவ் (27). இருவரும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக தென்பாகம் காவல் நிலைய போலீஸாா் ஏற்கெனவே இவா்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், அஜித்குமாரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸாா் கபில்தேவ், அஜித்குமாரின் வீடுகளில் சோதனை நடத்தினா். அஜித்குமாரின் மாமியாா் வீட்டிலும் சோதனை நடத்தினா்.
அப்போது, அவரது மாமியாா் வீட்டின் வெளிப்புறம் ஒரு பையில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் 8 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பாதுகாப்பாக மீட்ட போலீஸாா், வல்லநாடு மலையடிவார பகுதிக்குக் கொண்டுசென்று செயல் இழக்கச் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








