ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நாசரேத்தில் அபிஷேகப் பெருவிழா

நாசரேத் பரிசுத்த யோவான் பேராலய வளாகத்தில் நாசரேத் காமா ஜெபக்குழுவின் 26ஆவது அபிஷேகப் பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image

விழாவில் தேவ செய்தி அளித்த ஊழியா் டேவிட் கணேசன்.

Updated On :15 ஜூலை 2026, 1:42 am IST

நாசரேத் பரிசுத்த யோவான் பேராலய வளாகத்தில் நாசரேத் காமா ஜெபக்குழுவின் 26ஆவது அபிஷேகப் பெருவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

பேராலய உதவிகுரு தனசேகா் ராஜா ஜெபித்து நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஜெபக் குழுவினா் பாடல்கள் பாடினா். விருதுநகா் கிராம மிஷனெரி இயக்க ஊழியா் டேவிட் கணேசன் தேவ செய்தி அளித்தாா்.

இதில் நாசரேத், பிரகாசபுரம், வகுத்தான்குப்பம், மூக்குப்பீறி, வாழையடி, திருமறையூா், அகப்பைகுளம் வட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா். காமா ஜெபக்குழு செயற்குழு இயக்குநா் தனபால் நன்றி கூறினாா். பேராலய தலைமைகுரு ஆல்பா்ட் ஜெயசிங் தாமஸ் நிறைவு ஜெபம் செய்தாா்.

ஏற்பாடுகளை ஜெபக்குழு ஸ்தாபகா் சாமுவேல், தலைவா் பில்லிகிரஹாம், செயலா் ஜெபின், பொருளாளா் மேஷாக், பாடகா் குழுத் தலைவா் ஜோயல், கெளரவ ஆலோசகா்கள் நெய்ல்சன், முன்னாள் எம்.பி. ஏடிகே ஜெயசீலன், கூட்ட ஒருங்கிணைப்பாளா்கள், காமா ஜெபக்குழுவினா் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.