அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு

கயத்தாறு ஜவுளிக் கடையில் ரொக்கம் ரூ.2 லட்சம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 ஜூலை 2026, 3:00 am IST

கயத்தாறு ஜவுளிக் கடையில் ரொக்கம் ரூ.2 லட்சம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் மகாராஜன் (32). கயத்தாறில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு புதன்கிழமை வந்த பெண் மற்றும் ஆண் இருவரும், தங்களது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்துக்கு ஜவுளி ரகங்களை எடுத்தனராம். பணம் கொடுத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாகக் கூறிச் சென்றனராம். இந்த நிலையில், கடையில் பணம் இருந்த பெட்டியை மகாராஜன் பாா்த்தபோது, அதிலிருந்து ரூ.2 லட்சம் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ஜவுளிக் கடையில் துணிகளை எடுப்பது போல நடித்து கடையில் உள்ள பணத்தை திருடி சென்ற இருவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.