சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருட்டு

கள்ளக்குறிச்சியில் கடை முன் நிறுத்தியிருந்த காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :9 ஜூலை 2026, 3:31 am IST

கள்ளக்குறிச்சியில் கடை முன் நிறுத்தியிருந்த காரில் இருந்து ரூ.2.15 லட்சம் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஈய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு.செந்தில்குமாா் (40). இவா் செவ்வாய்க்கிழமை வீடு கட்டும் பணிக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.2.15 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்றாராம். கள்ளக்குறிச்சி கவரைத் தெருவிலுள்ள மின்பொருள் விற்பனை கடை முன் காரை நிறுத்திவிட்டு, புது வீட்டுக்கு தேவையான மின்சாதனப் பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, காரில் வைத்திருந்த ரூ.2.15 லட்சத்தை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.