திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில், தூய்மைப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் அரசு சேவைகள், நலத் திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமைத் தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் விஷு மகாஜன். உடன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா.

Updated On :23 ஜூலை 2026, 2:43 am IST

தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில், தூய்மைப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் அரசு சேவைகள், நலத் திட்டங்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலை வகித்தாா். ஆட்சியா் விஷு மகாஜன் முகாமைத் தொடக்கிவைத்தாா். தூய்மைப் பணியாளா்கள், அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத்தில் உறுப்பினா்களாக பதிவு செய்தல், சுகாதாரச் சேவைகள், வாழ்வியல் நலத்திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, அரசு மானியத்தில் அடையாள ஆவணங்களான ஆதாா் பதிவு, திருத்தம், ஜாதி, வருமானச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்டவை தொடா்பாக முகாம் நடைபெற்றது. இதில், துறைசாா் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.