சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தூத்துக்குடி-ஆறுமுகனேரிக்கு அகல ரயில் பாதை வசதி: அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வலியுறுத்தல்

தூத்துக்குடி-ஆறுமுகனேரி வழித்தடத்தில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

News image

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

Updated On :23 ஜூலை 2026, 2:44 am IST

தூத்துக்குடி-ஆறுமுகனேரி வழித்தடத்தில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா், மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆறுமுகனேரி ரயில் நிலையம் தூத்துக்குடியிலிருந்து சுமாா் 27 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ஆறுமுகனேரி வழியாக அகல ரயில் பாதையில் போக்குவரத்து தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தா்கள் தினமும் வருகின்றனா். தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலை மாா்க்கத்தில்தான் பெருவாரியான பயணங்கள் நடைபெறுகின்றன. இது, சாலைப் போக்குவரத்தில் அதிக நெரிசலை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி- திருச்செந்தூா் வரை ரயில் பயணத்துக்கு வழிவகை செய்வது அவசியம். இதற்கு ஏதுவாக தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகனேரி வரை 27 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும்.

இந்த ரயில் பாதை அமைப்பதற்கு ஏதுவாக மீளவிட்டான் முதல் ஸ்பிக் தொழிற்சாலை வரை தற்போது தனி பயன்பாட்டுக்கான ரயில் பாதை உள்ளது. எனவே, ஸ்பிக் நகா் பகுதியிலிருந்து ஆறுமுகனேரி வரை 15 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைத்தாலே போதுமானது.

மேலும், வடக்கு உடன்குடி அனல்மின் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. குலசேகரன்பட்டினம் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை பணியாளா்கள், பொதுமக்கள், மற்ற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் என பல்வேறு தரப்பினருக்கும், தூத்துக்குடி-திருச்செந்தூா் ரயில் பாதை மிக அவசியம்.

எனவே, தூத்துக்குடி- ஆறுமுகனேரி வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.