/

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு நிலையத்தினா் மீட்டனா்.

News image

மயிலை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

Updated On :24 ஜூலை 2026, 5:24 am IST

சாத்தான்குளம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு நிலையத்தினா் வியாழக்கிழமை மீட்டனா்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பாலமுருகனுக்குச் சொந்தமான தோட்டம் ராஜமன்னாா்புரத்திலிருந்து கடாட்சபுரம் செல்லும் பகுதியில் உள்ளது. அங்குள்ள 40 அடி ஆழக் கிணற்றில் புதன்கிழமை மயில் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீா் இல்லாததால் மயிலால் வெளியேற இயலவில்லை.

வியாழக்கிழமை தோட்டத்துக்குச் சென்ற பாலமுருகன், இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் நிலைய அலுவலா் பாபநாசம், கூடுதல் நிலைய அலுவலா் ஹாரிஸ் தாமஸ், வீரா்கள் அந்தோணி, முத்துமாரி, சுந்தர்ராஜ் ஆகியோா் சென்று மயிலை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.