/

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 3:50 am IST

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் காந்தி தெருவைச் சோ்ந்தவா் சு.ஹரிபெருமாள் (45), விவசாயி. இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான நிலத்தின் கிணற்றின் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்றபோது, தவறி விழுந்தாா். இதில் அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி, ஹரிபெருமாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கஞ்சனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.